பனிவெண்புறா சிறகுகள் மேல் ON THE WINGS OF A SNOW-WHITE DOVE நவம்பர் 28, 1965 லைஃப் கூடாரம் ஷ்ரீவ்போர்ட், லூயிசியானா, அமெரிக்கா நாம் தலைவணங்குவோம்: 1, அன்புள்ள கர்த்தாவே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையைக் குறித்த வாக்குத்தத்தத்துக்காக இன் றிரவு நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அங்கு ஒரு மகத்தான சந்திப்பில் நாங்கள் சந்திப்போம், அங்கு மகிழ்ச்சிக்கும் பாடல் களுக்கும் முடிவேயிராது, வரவிருக்கும் முடிவற்ற காலங்கள் முழுவதும் நாங்கள் உம்மை துதித்துக் கொண்டேயிருப் போம். இன்றிரவு இந்த கூட்டத்தை நீர் ஆசிர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். இந்த கூடாரத்தையும். இதன் பணியாளர்களையும், போதகர்களை யும், உடன் ஊழியர்களையும், உடன் போதகர்களையும் எல்லோரையும் ஆசிர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். 2. கர்த்தாவே இந்த கூட்டத்தில் பங்கு கொள்வதற்கென அநேக மைல்கள் தொலைவிலிருந்து இங்கு வந்துள்ள இவர்களை ஆசிர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். அவர்கள் வீடு திரும்ப பயணப்படும் போது, உமது இரக்கத்தின் கரத்தை அவர்கள் மேல் வைப்பீராக. கர்த்தாவே, இதை அருளும். உம்மை ஆராதிப்பதற்கென, தேவனுடைய வீடு என்றழைக்கப் படும் இவ்விடத்தில் நாங்கள் இன்னும் அநேக முறை கூடும்படி அருள் புரியும். தொலைபேசியின் மூலம் இன்று இணைக்கப்பட்டுள்ள வர்களை ஆசிர்வதிப்பீராக. இரட்சிக்கப்படாத ஒவ்வொரு நபரும் இன்றிரவு தங்கள் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவை கண்டு கொள்ள அருள்புரியும். வியாதியஸ்தரையும் அவதிப்படுகிறவர் அனைவரையும் சுகப்படுத்தும். பிதாவே, உமது ஊழியன் ஊழியத் திற்கென ஆஜாராகிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென். 3. கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பாராக. இன் றிரவு இங்குள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, - புறாவின் சிறகுகள் மேல் என்னும் பாடலின் கடைசி பாகத்தை சகோ. எர்னி பாடிக் கொண்டிருந்த போது நான் உள்ளே நுழைந்தேன். அது அழகான கவிதை என்பது நிச்சயம், அது நேரத்துக்கேற்றது. என் வே, இப்பொழுது நாம் மிக நன்றியுள்ளவர்களா யிருக்கிறோம். 4. தேசத் தின் மற்ற பாகங்களிலிருந்து இங்கு இணைக்கப்பட்ட டுள்ளவர்களே. இன்றிரவு இக்கட்டிடத்தில் மிக நெருக்கமாக கூடி யுள்ள ஜனங்களின் முகங்களில் உள்ள எதிர் நோக்கு தலைக் காண நீங்கள் இங்கிருந்தால் நலமாயிருக்கும்; அவர்களுக்கு அற்புதமான நேரம் உண்டாயிருக் கிறது. 5. நாங்கள் சகோ.ஜாக் மூர், சகோதரி மூர், சகோ.நோயல், சகோ.போட்லியர், சகோ.பிரவுன், இங்குள்ள கூட்டாளிகள், கூடாரத்திலுள்ள அனைவர் , மற்றும் இங்கு பணிபுரிகின்றவர் அனைவருக்கும், நாங்கள் இங்கு வரும்படி எங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காக, எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். 6. அது... நிஜமாக... ஒரு விதமான... எதேச்சையாக இணைந்தது என்று சொல்ல முடியாது. தேவனுடைய கரம் அதை வாய்க்கச்செய்தது . இது நிகழ்வதைக் குறித்து சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள ஒரு சகோதரன் ஒரு சொப்பனம் கண்டார். நான் இந்திய காலணிகளையும் வெள்ளை கால் சட்டையும் அணிந்து நின்று கொண்டிருந்தேன் என்று அவர் கூறினார். நான் இங்குள்ள கூட்டத்தை ஒழுங்கு செய்ய சகோ, ஜாக்கை கொலரா டோவிலுள்ள கார்சனில் சந்தித்த போது. அதே விதமாக இந்திய காலணிகளையும் வெள்ளை கால்சட்டையும் அணிந்திருந் தேன். சகோ.லியோ, நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், உங்களையும் சில நிமிடங்கள் சந்தித்தேன். அப்பொழுது தான் அந்த விடத்தில் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்ய வேண்டு மென்று முடிவு எடுக்கப்பட்டது. 7, இது ஞாயிறு இரவு; உங்களில் அநேகர் வீடு திரும்புவதற் கென இன்றிரவு முழுவதும் காரோட்டி செல்ல வேண்டும் மென்று நானறிவேன்; சிலர் காலை வரைக்கும் காரோட்டி செல்ல வேண்டும். நான் இரண்டு நாட்கள் காரோட்ட வேண்டும். எனவே உங்களை நாங்கள் நீண்ட நேரம் பிடித்து வைத்திருக்கப் போவதில்லை. இதை நான் பழைய காலத்து இரவாக மாற்ற முயல்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு சகோ.பிரவுன், சகோ. ஜாக், மற்றும் நாமனைவரும் எவ்வாறு வியாதியஸ்தர்களுக் காக ஜெபிப்பது வழக்கமோ, அதே விதமாக இன்றிரவும் நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். 8. பின்னால் உள்ளவர்கள் நான் பேசுவதைக் கேட்க முடிகிறதா? என் தொண்டை கரகரப்பாயிருப்பதால், நான் ஒலிப்பெருக்கியை தாழ்த்திக் கொண்டேயிருக்கிறேன். 9. எனவே நாங்கள்.... சிறிய ஒன்று, இந்த சிறு சம்பவம் நிகழ்ந்தது. சற்று முன்பு அவர்கள் என்னிடம் இதை கூறினர். ஸ்தாபனத்தை விட்டு வெளி வந்த ஒரு சகோதரன்- அவர் ஒருக்கால் இன்றிரவு இக்கூட்டத்துக்கு வந்திருக்கக் கூடும்செய்தியைக் கேட்பதற்கென ஷ்ரீவ் போர்ட்டுக்கு வந்திருந்தாராம். அவா வழித் தவறிப் போய், அவர் எங்கிருக்கிறார் என்று அறியா மல், கீழ்பட்டினத்துக்கு சென்றார். அங்கு ஜனங்கள் கூடியிருப் பதை அவர் கண்டு, '' இங்கு தான் பில்லி பிரான் ஹாம் பிரசங்கம் செய்யப் போகின்றாரா?' என்று கேட்டாராம். 10. அங்கிருந்த ஒருவர், "இல்லை, இங்கு சகோ,பில்லி கிர ஹாம் படக்காட்சியின் மூலம் பிரசங்கம் செய்யப் போகின்றார்' என்றாராம். 11. உடனே அவர், ''என்னை மன்னிக்கவும், நான் தவறான இடத்துக்கு வந்து விட்டேன்' என்று கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டார். 12. அவர் வந்து கொண்டிருந்த போது, ''கர்த்தாவே, இப்பொழுது நான் எங்கே போக வேண்டும்?' என்று கூறி, பெரிய தெரு வழியாக நடந்து கொண்டு வந்தாராம். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அந்த தெருக்கோடியில் - டெக்ஸாஸ் தெருவில் ஒரு பெரிய ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தின் மேல் ஒரு பெரிய வெள்ளை சிலுவை வைக்கப்பட் டுள்ளது. கர்த்தர் அவரிடம், ' நடந்து கொண்டேயிரு'' என்றாராம். அவர் அங்கு அடைந்த போது, அங்கு ஒரு... அவர், ''இங்கு தான் அந்த கூட்டம் நடைபெற வேண்டும். இங்கு நிறைய கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன'' என்று எண்ணி னாராம். அப்பொழுது மணப்பெண்ணும், மணமகனும் ஆலயத்தி -லிருந்து வெளியே வருவதை அவர் கண்டார். அந்த திருமணம் நேற்றிரவு நடந்தது. நானும் கூட அவர்கள் வெளியே வருவதைக் கண்டேன். கர்த்தர் ஜீவரிடம், அது தான் இது. நீ ஸ்தாபனத்தை விட்டு வெளியே வந்து. மண வாளனுடன் செல்ல மணவாட்டியாய் பிரவேசித்து விட்டாய்" என்றாராம். பாருங்கள்? பாருங்கள்? 13. நான் தெரு வழியாக வந்து கொண்டிருந்த போது என் மனைவியVடம். நாம் பக்கத்தில் வர வர, எவ்வாறு சந்திரனும் நட்சத்திரங்களும் அந்த சிலுவையின் மேல் தொங்கிக் கொண்டி ருப்பதைப் போல் காணப்படுகின்றன என்று குறிப்பிட்டேன். இப்படிப்பட்ட சிறு காரியங்களை நான் நோக்கும் போது. ஒருக்கால் நான் தேவன் பேரிலும் என் ஊழியத்தின் பேரிலும் கொண்டுள்ள நம்பிக்கைக்குப் புகழ்ச்சியாக அது அமைந்துள்ளது என்று எண்ணு கிறேன். 14. இன்றிரவு நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். டூசானில் விக்டர் லாடி யூ என்னும் பிரெஞ்சுக்காரர் இருந் தார். அவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்த உண்மையான பிரெஞ்சுக் -காரர். இதைக் குறித்து அன்றொரு நாள் உங்களிடம் கூறினேன் என்று நினைக்கிறேன். நான் ஸ்தாபன முறைமைகளுக்கும் உண்மை யான கிறிஸ்தவ மார்க்கத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை வலியுறுத்தி இவ்விரண்டையும் வெவ்வேறாக பிரித்துக் கொண்டி ருந்தேன். அப்பொழுது ஒரு மனிதன் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.... ஒரு பிரபலமான ஸ்தாபன பெந்தெ கொஸ்தே சபையில் இதைக் குறித்து நான் ஒரு விதமான சிறு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தேன். 15. அப்பொழுது டானி ஹென்றி -அவர் ஏதோ ஒரு சினிமா நட்சத்திரத்தின் ஒன்றுவிட்ட சகோதரன் என்று நினைக் சிறேன், அப்படி ஏதோ ஒன்று - அவர் ஒரு பாப்டிஸ்டு. அவர் மேடைக்கு ஓடி வந்து என் தோள்களின் மேல் கைபோட்டு; "சகோ. பிரான்ஹாமே. இது தேவதூஷணமாகத் தென்படாது என்று எண்ணுகிறேன். இது வெளிப்படுத்தின விசேஷம் 23ம் அதிகாரமாக இருக்கலாம்'' என்றார். அவர் ஏதோ ஒன்றைக் கூற முயன்ற போது, அந்நிய பாஷையில் பேசத் தொடங்கினார். 16. இதை மூன்று பிரெஞ்சுகாரர்கள். ஒரு பிரெஞ்சு ஸ்திரீ (பெரிய தேக அமைப்பு கொண்டவள், கருமை நிறமுடையவள். லூயிசியானாவில் வசிக்கிறாள். ஒருக்கால் இன்றிரவு அவள் இங்கி ருக்கலாம்) அவர் பேசினதை ஒரு தாளில் எழுதினாள். பிறகு விக் டர் லாடியூ என்னும் அந்த போதகரும் அதை குறித்துக் கொண் டார். இருவரும் தாங்கள் எழுதின குறிப்புகளை பின்பு ஒப்பீட்டு சரி பார்த்துக் கொண்டனர். பழுப்பு நிறத் தலைமயிர் கொண்ட ஒருவர் மிகவும் பின்னால் நின்று கொண்டிருந்தார்- அவரால் இயன்றவரை பின்னால், அவர் முன்னால் நடந்து வந்து, இவர்க ளிருவரும் எழுதி வைத்த குறிப்புகளைக் காண விரும்பினார். அவர் ஐ.நா. சபையில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர். இவர்கள் மூவர் --எழுதின குறிப்புகளும் ஒன்றாகவே இருந்தன. 17. அதன் அர்த்த ம் இது. இந்த கடினமான வழியை நீ தெரிந்து கொண்டதனால்.... நீயே அதை தெரிந்து கொண்டாய், நீ அதை ஏற்றுக் கொண்டாய்..... உன் சொந்த தெரிந்து கொள்ளுதலின்படி அதை தெரிந்து கொண்டாய் (அது நமக்கு நன்றாகத் தெரியும். மோசே தானாகவே அதை தெரிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது.) இதுவே பிழையற்ற, சரியான வழி , ஏனெனில் அது என்வழி. என்னே ஒரு மகிமையான தீர்மானத்தை நீ செய்திருக்கிறாய் !.... அதன் விளைவாக பரலோகத்தின் ஒரு பெரிய பங்கு உனக்காக காத்தி ருக்கிறது. இது தன்னில் தானே தெய்வீக அன்பில் மகத்தான வெற்றியை அளிக்கும். 18. மூன்று பேரும் எழுதின குறிப்புகள் ஒன்றாகவே இருந் தன. என் வேதாகமத்தில் அதை வைத்திருந்ததாக எனக்கு ஞாபகம் (அதை தேடிப் பார்த்தேன், காணவில்லை)-அந்த மூலப் பிரதியை. 19. டானி ஹென்றிக்கு பிரெஞ்சு மொழி தெரியாது... அவனுக்கும் என்னைப் போல் சரியான ஆங்கிலமே தெரியாது. அப்படியிருக்க பிரெஞ்சு மொழி அவனுக்கு எப்படி தெரியும்? அங்கு நீங்கள் கவனிப்பீர்களானால், பிரெஞ்சு மொழியில் அவர் கள் வினையெச்சத்துக்கு (adverb) முன்பாக வினைச்சொல்லை (verb) உபயோகிக்கின்றனர். அந்த மூவர் மொழி பெயர்த்தவை ஒன்றா கவே இருந்தன. 20. சில நாட்களுக்கு முன்பு டானி ஹென்றி... டானி ஒருக்கால் இன்று கேட்டுக் கொண்டிருக்கலாம். விக்டர் லாடியூவும் கூட, ஏனெனில் அவர் டூசானில் உள்ளதாக கேள்விப்பட்டேன்.' சகோ, கிரீன் போதகராயுள் ள டூசான் கூடாரத்தைச் சேர்ந்த வர்களே, பார்க் அவின்யூவின் அடிவாரத்தில்; அது நெடுஞ்சாலை எண் 80ஐ இந்த பக்கம் வந்தடைகிறது. அந்த விடத்தில் விக்டர் லாடியூ கூடாரக் கூட்டம் நடத்துவதாக கேள்விப்பட்டேன். நாளை இரவும் அதற்கடுத்த இரவும் நீங்கள் அங்கு செல்வீர்களானால்அவர் எவ்வளவு நாட்கள் இருப்பாரோ அவ்வளவு நாட்கள்அவர் பேசுவதைக் கேட்க அங்கு செல்லுங்கள். டானி ஒருக்கால் அவருடன் கூட இருக்கலாம், இன்றிரவு அவர்கள் கூடாரத்தி லிருந்து இதை கேட்டுக் கொண்டிருக்கலாம். எனக்குத்தெரியாது. 21. இந்த சம்பவம் நடந்தவுடனே, டானி எருசலேமுக்குச் சென்றார். உயிர்த்தெழுதலுக்கு முன்பு இயேசுவின் உடல் கல்ல றையில் கிடத்தப்பட்டிருந்த கற்பலகையின் மேல் அவர் படுத்தி ருந்ததாகக் கூறினார். அப்பொழுது திடீரென்று அவருக்கு என் நினைவு வந்ததாம். அவர் அழுது கொண்டே கல்லறைக்கு வெளியே ஓடி வந்து, வெளியே நடந்து சென்றதாகக் கூறினார். அவர் ஏவப்பட்டார். அவர் பாறைகளைக் கொண்டு பொருட்களை உண்டாக்குபவர். இயேசுவின் சிலுவை நிறுத்தப்பட்டிருந்ததாக அவர்கள் கூறின இடத்துக்கு அவர் சென்று... ஒரு அங்குல சதுரம் அளவுக்கு அங்கிருந்த பாறையிலிருந்து உடைத்து, தன் ஜேபியில் போட்டுக் கொண்டு அதை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டு மென்று அவர் மனதில் எழுந்தது. 22. அவர் அப்படி செய்தபோது. ஏதோ ஒன்று அவரிடம் "இதைக் கொண்டு சகோ.பிாரன்ஹாமுக்கு ஒரு ஜதை சட்டை யின் முன் கை இணைப்பை (cuff links) செய்து கொடு'' என்ற தாம். எனவே அவர் அந்த பாறையை அமிலத்தில் போட்டு, சுண்ணாம்பு பாறையைப்போல் காணப்படும் அந்த பாறையின் நிறத்தை இரத்தநிறப் பாறையின் நிறத்துக்கு மாற்றினார். அதைக் கொண்டு அவர் முன் கை இணைப்பை உண்டாக்கினார். 23. அவர் அதை என்னிடம் கொடுத்த போது, அவர் கவனிக்கவில்லை. அந்த இரண்டு முன்கை இணைப்புகளின் நடுவில் அந்த நேரான குறுகிய கோடு ஓடுகின்றது. அதை இன்றிரவு நான் அணிந்து கொண்டிருக்கிறேன். வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும் போது அது என் மேல் இருக்கும். பாருங்கள் , சொட் டும் இரத்தத்தைப் போன்று இரத்த நிறமுள் ள கல்லும், அதில் ஓடிக் கொண்டிருக்கும் நேரான, குறுகிய கோடும். அவருடைய தீர்க்கதரிசனம் உரைத்தது போன்றே, நேரான குறுகிய வழி பாருங்கள், அந்த தீர்க்கதரிசனத்தில். அதை நான் அவருக்கு காண்பித்தேன், 24. டானி. இன்றிரவு நீங்களோ அல்லது சகோ' லாடி யூவோ கேட்டுக் கொண்டிருப்பீர்களானால், நாங்கள் வியாதியஸ்தர்களுக்கு பழமை நாகரீகம் கொண்ட விதத்தில் ஜெபிக்கும் இரவாய் இது இருக்கும். நான் இந்த நேரான, குறுகிய வழியில், சுவிசேஷத்தின் வழியில், வார்த்தையின் வழி யில் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நடந்து கொண் டிருப்பதற்காக எனக்கு மிக்க மகிழ்ச்சி. 25. தேவன் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக. பேசுவதற்கு நீங்கள் மிகவும் அருமையானவர்கள். நான் நீண்ட நேரம் உங்களிடம் பேசி, உங்களை நீண்ட நேரமாக இங்கு வைத் திருக்கப் போகின்றேன், ஜெபம் செய்யப்படுவதற்காக இங்கு முன்னூறு முதல் நானூறு பேர்கள் உள்ளதாக பில்லி என்னிடம் கூறினான். எனவே கூடுமான வரை நமது செய்தியை நான் வேக மாக பிரசங்கித்து விட்டு, அதன் பிறகு வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். 26. அரிசோனாவிலுள்ளவர்களே, அடுத்த சனி இரவு நாங் கள் (அந்த நகரத்தின் பெயர் ஞாபகத்துக்கு வருவதேயில்லை), அரிசோனாவிலுள்ள யூமாவில் இருப்போம். அதன்பிறகு ஞாயிறு காலை கலிபோர்னியாவுக்கு சென்று, லாஸ் ஏஞ்சலிசுக்கும் இன் னும் அங்குள்ள வேறு சில இடங்களுக்கும் செல்வோம். 27. இன்றிரவு, வேதத்திலிருந்து ஒரு பொருளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 28. இன்று நான் மாரிசன்ஸ் உணவு விடுதிக்கு சென்றிருந் தேன்-சகோ.ஜாக்கும் அவருடைய மனைவியும், நானும் என்னு டைய மனைவியும். சிறிது நேரம் ஒருமித்து கழிக்கலாமென்று எண்ணி, நாங்கள் மாரிசன்ஸ் உணவு விடுதிக்கு சென்றிருந் தோம். நாங்கள் சில நாட்களாக இப்படி வெளியே செல்ல வில்லை, ஸ்திரீகளும் இவ்வாறு ஒன்றுகூடி சில நாட்களாயிற்று: அங்கு ஒரு வாலிபன் என்னிடம் வந்தார். அவருடைய பெயர் கிரீன். அவர் பெர்ரி கிரீனின் தகப்பனார். அவர், ''சகோ.பிரான் ஹாமே, நீங்கள் அன்றொரு இரவு • ஜானி பின்' (Johnny Pin) னைக் குறித்து பேசினீர்களே, உங்களுக்கு அதைக் கொண்டு வந்தி ருக்கிறேன்'' என்றார். அது என்ன? நான் 'பாபி பின்' (Bobby